நடிகர் விக்ரமிற்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அவருக்கு மாரடைப்பு இல்லை என்றும் சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், விக்ரமிற்கு மருத்துவ நிபுணர்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.