ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இருபிரிவினர் நாற்காலிகள் வீசி தாக்கியதில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற சிலர் திடீரென இ.பி.எஸ்.க்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அங்கிருந்தவர்களுக்கு இடையே கைக்கலப்பில் ஈடுபட்டு நாற்காலிகளை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், சிலர் காயமடைந்த நிலையில், கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே நின்ற காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.