கடலூர் திட்டக்குடி அருகே சாலையில் மாணவ, மாணவிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளிப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கனகம்பாடி கிராமத்தில் உள்ள ஐவனூர் - ஆலம்பாடி சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் சிறிய காயங்களுடன் தப்பினர்.