ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியில் ஏற்பட்ட மோதலால் அடுத்தடுத்து இரு கிராம மக்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 500 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விளங்குளத்தூரில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் தோல்வியுற்ற கீழகன்னிசேரி கிராம அணியை, விளங்குளத்தூர் கிராம இளைஞர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக இரு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து அறிந்த 2 கிராம மக்களும் ஆயுதங்களுடன் ஒன்று திரண்டு மோதலில் ஈடுபட்ட முயன்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இரு கிராம மக்களையும் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்த நிலையில், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.