மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த கால அட்டவணையை முடிவு செய்யும் தமிழக அரசு, அத்திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த அதிருப்தியை தெரிவித்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் காலஅவகாசம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், விசாரணைக்கு ஆஜராகாத அதிகாரிகளுக்கு இனி பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். அடுத்தகட்ட விசாரணை ஜுலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.