தென்காசி மாவட்டம் கடையம் அருகே காற்றில் மின் கம்பிகள் ஒன்றோடொன்று உரசாமல் இருக்க மின் கம்பியில் செங்கல் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கடையம் பகுதியில் கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின்கம்பிகள் உரசி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், மாதாபுரம் சோதனைச் சாவடி அருகே மின்கம்பிகளில் கயிறு, துணியைக் கொண்டு செங்கற்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன.
இது குறித்து விளக்கமளித்த கடையம் துணை மின்நிலைய அதிகாரி, கிராம மக்களே இவ்வாறு செய்திருப்பதாகவும் செங்கற்களை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.