இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 இந்திய மீனவர்களையும், அவர்களது படகினையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டது அவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை வரும் 8ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.