கடலூர் அருகே கைவிடப்பட்ட தொழிற்சாலையிலிருந்து லாரியில் இரும்பு பொருட்கள் கடத்தப்பட்டதை அடுத்து, லாரியை தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராமமக்கள், அதிகளவில் திருட்டு நடைபெறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
பெரியகுப்பம் கிராமத்தில் செயல்படாத தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிலர் அங்கிருந்து இரும்பு பொருட்களை திருடிச்செல்வதாக கூறப்பட்ட நிலையில், அப்பகுதியை சுற்றி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தொழிற்சாலை ஊழியர்களே ஆட்களை கொண்டு 2 ஆண்டுகளாக இரவு நேரத்தில் லாரி மூலம் இரும்பு பொருட்களை கடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.