அறநிலையத்துறை கோவில்களின் சொத்துகள் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கு விசாரணையில், அறநிலையத்துறை கோவில் பணிக்காக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோவில் நிலத்தில் உள்ள கட்டிடத்தை சீல் வைக்கவும், தர மறுத்தால் அவர்கள் சொத்துக்களை முடக்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.