தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 சதவீதத்துக்கும் கீழ் உள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, பாதிப்பு அதிகமானால் கொரோனா தடுப்பு மையங்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.