மதுரை அருகே தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கம்பியால் அடித்து கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் - முருகாம்பாள் தம்பதி தனியார் மில்லில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முருகாம்பாள் தினமும் செல்போனில் வேறு ஒருவருடன் பேசி வந்ததால் சந்தேகமடைந்த கிருஷ்ணன் அவருடன் தொடர்ந்து சண்டையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்றிரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி முருகாம்பாள் தலையில் கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.