முறையான வழிகாட்டுதல்கள் இன்றித் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஏற்கத் தக்கதல்ல என்றும், இது மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை, தகுதியற்றவர்களைப் பணியில் அமர்த்த வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்தார்.
அரசு சார்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.