கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களிடம் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டு பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அண்மையில் 180 பேருக்கு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்ட நிலையில், ரேஷன் கார்டு பெற்றுக் கொண்டவர்களை தொடர்பு கொண்டு வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.