வந்தவாசி அருகே 15 நாட்களுக்கு முன் மாயமான இளைஞர் ஒருவரின் எலும்புகளை போலீசார் எரிந்த நிலையில் மீட்டுள்ளனர்.
நாவல்பாக்கம் கிராமம் அருகே உள்ள வறண்டு போன குளத்தில் மனித எலும்புகள் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. எலும்புகளுடன் எரிந்த நிலையில் இருந்த டி-ஷர்ட், கடை சாவி, பைக் சாவி ஆகியவற்றை சேகரித்து போலீசார் விசாரித்த போது 15 நாட்களுக்கு முன் காணாமல் போன விஜய் என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்த போது பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டத் தகராறு காரணமாக விஜயை கொலை செய்து உடலை எரித்து விட்டு, இருசக்கர வாகனத்தை கிணற்றில் வீசியதாகத் தெரிவித்துள்ளனர்.