மாவோயிஸ்ட் அமைப்பினரிடம் பயிற்சி பெற்ற நபரை ராஜபாளையம் அருகே வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு கேரள மாநில வனப்பகுதியில் மாவோயிஸ்ட்-களிடம் பயிற்சி பெற்று வந்த போது போலீசார் கைது செய்தனர்.
2019 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த ஐயப்பனை தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளனர்.