கரூரில் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டரை மதுரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கரூர் தான்தோன்றி மலை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கம்பிவேலி உற்பத்தி நிறுவனம் தொடங்க ஜி.எஸ்.டி. ஆர்சி எண் பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் ஜி.எஸ்.டி. எண் வழங்க கரூர் ஜிஎஸ்டி அலுலவகத்தில் இருந்த ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டர் சுபேசிங், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஐயப்பன் புகார் அளிக்கவே, அதிகாரிகளின் திட்டப்படி கரூர் ஜி.எஸ்.டி. அலுவலகம் முன்பு ஐயப்பன் 5 ஆயிரம் ரூபாயை சுபேசிங்கிடம் கொடுத்தார்.
அதனை சுபேசிங் பெற்றுக்கொண்ட போது அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.