கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், பொது இடங்களில் தொற்று தடுப்பு விதிகள் பின்பற்றுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், மக்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.