கரூரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சக்திவேல் என்பவரின் வீட்டின் முன் நின்ற 2 இருசக்கர வாகனங்கள், நேற்று தீக்கிரையான நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த போலீசார், மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் தீ வைத்து விட்டு சென்றவதை கண்டறிந்தனர்.
சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் மற்றொரு இரு சக்கர வாகனம் தீக்கிரையான நிலையில், தொடர் தீவைப்பு தொடர்பாக வீடியோவில் உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.