சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று கரும்பு லாரியை வழிமறித்தது.
தாளவாடியில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த லாரியை காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வழிமறித்த காட்டு யானை, தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்புகளை ருசிபார்க்கத் தொடங்கியது.
சற்று நேரத்திற்குப் பின் யானை வனப் பகுதிக்கு சென்றதால், அங்கு அணிவகுத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டன.