அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
இது குறித்து தெரிவித்த அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க டெல்லி செல்வதாக கூறினார்.
மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் சென்றுள்ள ஓ.பி.எஸ்., பொதுக்குழு கூட்டம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது பற்றி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.