கொடைக்கானலில் 10 டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப்பெறும் நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஊட்டி மற்றும் கொடைக்கானலில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுமாறு டாஸ்மாக் கடைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று கொடைக்கானலில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, பின் காலி பாட்டில்களை வாடிக்கையாளர்கள் ஒப்படைக்கும் போது 10 ரூபாய் திருப்பித் தரப்படுகிறது.