தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மேல்சிகிச்சைக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி,.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.