செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நாட்டிலேயே முதல் முறையாக.. முதல் பயணத்தில்.. முதல் தனியார் ரயில்

Jun 14, 2022 09:22:02 PM

நாட்டிலேயே முதல் முறையாக தனியாரால் இயக்கப்படும் ரயில் கோவையில் இருந்து சீரடிக்கு பயணத்தை தொடங்கியது. திருப்பூர், ஈரோடு,சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக செல்லும் ரயிலில் 1,500 பேர் பயணிக்கின்றனர்.

மத்திய அரசின் 'பாரத் கௌரவ்' திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 5 நகரங்களில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாகக் கோவையில் இருந்து ஷீரடிக்கு இன்று முதல் ரயில் சேவை இயக்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இந்த ரயிலை இயக்குகிறது.

வட கோவை ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் இயக்கப்பட்ட நிலையில், அங்கு மேள, தாளங்கள் முழங்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்த ரயிலில் பயணிக்க ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக ஷீரடிக்கு அந்த ரயில் சென்றடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையிலிருந்து ஆயிரத்து 433 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சீரடி செல்லும் ரயில், மந்திராலயாவில் மட்டும் 5 மணி நேரம் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

20 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலின் உள்பக்கம் பிரத்தியேகமாக நாற்காலிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. ரயிலில் ஒரு மருத்துவர் பணியமர்த்தப்பட்ட நிலையில், அவர் அவசர கால சேவைக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவார் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் தனியாக கட்டணம் செலுத்தி உணவுகளை ஆர்டர் செய்துகொள்ளலாம் என்றும் சப்பாத்தி, சாத வகைகள், சமோசா, சாண்ட்விச், சூப் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சீரடி சென்று மீண்டும் கோவைக்கு ஐந்து நாட்கள் பயணிக்கும் இந்த ரயிலில் செல்ல அதிகபட்ச கட்டணமாக 13 ஆயிரம் ரூபாயும், குறைந்தபட்ச கட்டணமாக 2 ஆயிரத்து 500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரயில் கட்டணம் மற்றும் பேக்கேஜ் கட்டணம் என்று இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பேக்கேஜ் பிரிவில் ஷீரடியில் சிறப்பு தரிசனம், மூன்று பேர் தங்கும் ஏ.சி அறை, காப்பீடு, ஷீரடி ரயில் நிலையத்திலிருந்து சாலைப் போக்குவரத்து உள்ளிட்டவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்
ஏலக்காய் விலை திடீர் உயர்வு..! காரணம் என்ன?
செயின் பறிப்புக் கொள்ளையர்களைக் காட்டிக்கொடுத்த "டாட்டூ".. சுவாரசிய பின்னணி..!
இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்
பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பிச் செலுத்தினால்தான் அரசாங்கம் நடத்த முடியும் - அமைச்சர் துரைமுருகன்
அரசு நிகழ்ச்சிகளில் எங்களது பெயர்கள் இடம்பெறுவதில்லை - அமைச்சர் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் புகார்
தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டி குழந்தைகள், செல்லப் பிராணிகளுடன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..!
மதுரை சாலையில் மனித தலை கிடந்த விவகாரம்.. போலீசார் விசாரணையில் தெரிந்த நாயால் நடந்த ட்விஸ்ட்..!
என்.எல்.சி முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்..

Advertisement
Posted Nov 16, 2024 in உலகம்,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?

Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?


Advertisement