கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மது போதையில் அடிக்க வந்த தந்தைக்கு பயந்து ரப்பர் தோட்டத்துக்குள் ஓடிய பெண் குழந்தை, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சுரேந்திரன், இரவு மது போதையில் மனைவி, குழந்தைகளை அடிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு பயந்து அருகில் இருந்த ரப்பர் காட்டிற்குள் 3 குழந்தைகளும் ஓடிய போது, 4 வயதான சுஷ்விஷா மோளை பாம்பு ஒன்று கடித்துள்ளது.
இது குறித்து அந்த குழந்தை அழுது கொண்டே கூறியதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்விஷா உயிரிழந்தார்.