திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று, பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி, சாலையின் மற்றோரு பாதைக்கு சென்றது.
அப்போது எதிரே வந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீது கார் மோதியது.