விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், தனியார் செவிலியர் கல்லூரி தலைவர், மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய விவகாரத்தில கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தாங்கள் கட்டிய கல்வி கட்டணம் மற்றும் தங்களது சான்றிதழ்களை திரும்ப பெறவும், வேறு கல்லூரியில் கல்வி கற்க ஏற்பாடு செய்யுமாறும் விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் மாணவிகள் முறையிட்டுள்ளனர்.