தமிழகத்தில் லாக் அப் மரணங்கள் தொடர்வதால், காவல்துறையில் உளவியல் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்நிலையங்களில் அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.