தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பேண்டேஜ் வாங்க சென்ற நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு மெடிக்கல் கடை பணியாளரை கத்தியால் தாக்கினர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மருந்தகம் ஒன்றில், நேற்று இரவு கண்ணன், வடிவேல் ஆகியோர் பேண்டேஜ் வாங்க சென்றனர். குடிபோதையில் இருந்த அவர்கள் போதிய பணம் தராமல் பேண்டேஜை வாங்க முயன்ற நிலையில், கடை உரியமையாளர் அதனை தரமறுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர், இருவரும் வாக்குவாதம் செய்து, கடை பணியாளரை கத்தியால் கையில் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.