புதுச்சேரிக்கு, இரண்டாவது முறையாக உரிய அனுமதியின்றி வந்த ‘கோர்டிலியா குரூஸ்’தனியார் நிறுவனத்தின் சொகுசு கப்பலை கடலோரக்காவல் படை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் கடந்த வெள்ளியன்று, புதுச்சேரி வந்தபோது உரிய அனுமதி இல்லாததால் அப்பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
மீண்டும் இன்று அதிகாலை அந்த சொகுசு கப்பல் புதுச்சேரி பகுதிக்குள் நுழைந்த போது, ரோந்து பணியில் இருந்த கடலோர காவல்படையினர், கப்பல் அதிகாரிகளை எச்சரித்து அனுப்பினர்.