இந்தியாவில் ராணுவம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அடைவது அவசியம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருப்பதாகவும், ஆன்மீகத்தில் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி என்றும் கூறினார்.
மேலும், காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகளும் முன்னேற்பாடுகள் செய்யாத நிலையில், அதற்காக முதல் அடியை எடுத்து வைத்துள்ள இந்தியா, வல்லரசு நாடாக வளர்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.