கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் சாலையில் வைக்கப்பட்ட பேரிகார்டு மீது மோதிய விபத்தில், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இளங்கோ என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
காக்கா தோப்பூர் பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரிகார்டு வைக்கப்பட்டிருப்பதை கவனிக்காமல் வேகமாக வந்த இளங்கோ, பேரிகார்டு மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.