செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

"விசாரணை கைதி மரணம் போலீசாரின் மோசமான மனநிலையை காட்டுகிறது" - உயர்நீதிமன்றம்.!

Jun 11, 2022 06:33:17 AM

விசாரணை கைதிகளை மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையினரின் மோசமான மனநிலையை காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் 'காவல்துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் 'காவல்துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஏ.ஜி.மவுரியா உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பி இருந்தனர். உயரதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதனை அடுத்து இன்றைய விசாரணையின்போது, விசாரணை கைதிகளை மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையினரின் மோசமான மனநிலையை காட்டுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. போலீசார் போர்வையில் காவல்துறையிலேயே கும்பலை உருவாக்கி, காவல் மரணம், நில அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், இதுபோன்ற கொடுங்குற்றங்களில் நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, மாநில அரசே நல்ல முடிவெடுத்து முறையான புகார் ஆணையத்தை அமைக்கும் என நம்புவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Advertisement
முறையான அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் நாட்டு வெடிகளைக் கொண்டு வந்த நபர்
தலையில் ரத்தம் வடிய, கையில் பட்டா கத்தியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற நபர்
கும்பகோணத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய ரவுடி மீது கொலை வெறி தாக்குதல்
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்னை ஏமாற்றி தப்ப முயன்ற இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மாநாடு... விவசாயி தாக்கப்பட்டதற்கு விவசாய சங்கங்கள் கண்டனம்
திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாமி தரிசனம்
அரூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சாலை உள்ள இடம் தனக்கு சொந்தமானது தனி நபர் தகராறு
நீலகிரி மாவட்டம் கோரஞ்சால் பகுதியில் கார், ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து
செங்கல்பட்டு ஸ்னோ வேர்ல்ட் அரங்கில் இயந்திரத்தில் சிக்கி துண்டான சிறுவனின் விரல்கள்
ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கம்பத்தில் மோதி நொறுங்கிய கார் - 2 பெண்கள் உயிரிழப்பு

Advertisement
Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!


Advertisement