காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கேரளா சென்று திரும்பிய மாணவர்கள் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 235 மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 21 மாணவிகளுக்கும் 8 மாணவர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.