அதிமுக ஆட்சியில் எடப்பாடி தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என முதலமைச்சர் தவறாக கூறியதாகவும், கல்லூரிகள், சாலை வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் பேட்டியளித்த அவர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான உயிர்கள் பறிபோவதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.