திருவாரூர் - காரைக்குடி வழித்தட புதிய அகலப்பாதையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக விரைவு ரயில் சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்ட விரைவு ரயிலானது நேற்று காலை காரைக்குடி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் சென்றடைந்தது. மீண்டும் நேற்று மாலை நாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு 7.40 மணியளவில் திருவாரூர் வந்தடைந்தது.
பின்னர் பொதுமக்கள் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும் செல்வராஜ் எம்.பி, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ ஆகியோர் பச்சை கொடியசைத்தவுடன் விரைவு ரயிலானது அங்கிருந்து காரைக்குடி நோக்கி புறப்பட்டுச் சென்றது.