செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

11 அடுக்கு - 794 அறைகள்.. அசர வைக்கும் சொகுசு கப்பல் சுற்றுலா..!

Jun 05, 2022 07:19:33 AM

தமிழகத்தில் முதன் முறையாக சுற்றுலா பயணிகளுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கார்டிலியா சொகுசுக் கப்பலின் சிறப்பம்சங்களை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாட்களும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் வழியே புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் வரை 5 நாட்களும் பயணிக்கும் வகையில் இந்த சொகுசுக் கப்பல் இயக்கப்படவுள்ளது. 11 அடுக்குகள் கொண்ட இந்த கப்பல் தான் நாட்டிலுள்ள பெரிய சொகுசு கப்பல்களுள் ஒன்றாகும்.

700 அடி நீளமுள்ள அந்த சொகுசுக் கப்பலில் 794 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம், 10 பெரிய உணவகங்கள், கலைநிகழ்ச்சிகள் காணும் இடங்கள் ஆகியவை உள்ளன. மேலும், மதுக்கூடம், உடற்பயிற்சிக் கூடம், மசாஜ் நிலையம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

கார்டிலியா சொகுசுக் கப்பலில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 800 பயணிகள் மற்றும் 800 பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 600 பேர் வரை பயணிக்கலாம். இந்த கப்பலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணமாக 20 ஆயிரம் ரூபாயாகவும், உயர் வகுப்பு பயணத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து கார்டிலியா சொகுசுக் கப்பலின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையிலிருந்து தொடங்கப்பட்டுள்ள சொகுசு கப்பல் சேவையை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர்.


Advertisement
Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..
உதகை, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் உறைபனி.. வாகன ஓட்டிகள் சிரமம்..
ராணுவ வாகன விபத்தில் பலியான தமிழக வீரர்.. 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..
உயர்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் 11 ம் வகுப்பு படித்த பழைய மாணவ, மாணவியர்களின் சந்திப்பு..
பா.ம.கவில் மூத்தவர்களை தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?.. அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி..
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு பெயர் மற்றும் டீசரும் வெளியீடு..
கழுகின் மீது பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ் கருவி?.. கழுகின் நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை..
அரசு பேருந்து ஓட்டுனரின் அஜாக்கிரதையால் சாலையின் இருந்த மீடியேட்டரின் மீது மோதி விபத்து..
திருச்செந்தூர் கோவிலில் ஆட்டம் போட்ட ரீல்ஸ் பிரபலம்.. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி நடனமாடியதாக பெண் மீது புகார்..
விமான நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனை... ரூ 4.36 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

Advertisement
Posted Dec 25, 2024 in தமிழ்நாடு,Big Stories,

Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?


Advertisement