இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களுக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மே மாதம் 23 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கத்தை வென்றதுடன், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றது.
இப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய அரியலூரை சேர்ந்த கார்த்தி, கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் ஆகியோருக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மேளதளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.