மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று 76 வது பிறந்தநாள். 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி. பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்...
அடிமைப் பெண் படத்தில் ஒரேயொரு டூயட் பாடலுக்கு இளமையான குரலைத் தேடினார் எம்ஜிஆர். அப்போது எம்ஜிஆருக்கு அறிமுகமான எஸ்.பி.பி. முதல் பாடலை கே.வி.மகாதேவன் இசையில் பாடினார். தொடர்ந்து அவர் ஏராளமான படங்களில் எம்ஜிஆருக்கு பாட வாய்ப்பு அளிக்கப்பட்டது
சிவாஜி கணேசன் தமது படங்களுக்கு டி.எம்.எஸ் குரலையே விரும்பிய போதும் எஸ்பிபியின் இளமை மிகுந்த குரலுக்காக பல வாய்ப்புகளை அளித்தார்
எம்ஜிஆர் சிவாஜிக்கு ஒரு டிஎம்எஸ் போல ரஜினிக்கும் கமலுக்கும் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் , மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் எஸ்பிபியின் குரலே மிகவும் பொருத்தமாக இருந்தது.
1970களில் இருந்து இறுதிக்காலம் வரை பல இயக்குநர்களுக்கும் பிடித்த பாடகராக இருந்தார்
இளையராஜா இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களுடன் எஸ்.பி.பி.யின் பங்களிப்பு மேலும் ஒரு புதிய சகாப்தமாக உருவானது
தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 16 மொழிகளில் அந்தந்த மொழியின் தன்மையோடு பாடலைப் பாடியதுதான் எஸ்.பி.பி.யின் தனிச்சிறப்பு..
பாலிவுட்டில் கமல், சல்மான்கான் உள்ளிட்ட நடிகர்களுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பி. இளைஞர்களின் அபிமான பாடகராக விளங்கினார்
பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும், 6முறை தேசிய விருதுகளையும், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றவர் அவர். பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி.யின் இசைப்பணி அவரது இறுதிமூச்சு வரை தொடர்ந்தது தனிச்சிறப்பு..