சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் ஊராட்சியில் கழிப்பறைகளை கட்டாமல் அரசு பணத்தை கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டு வரை 403 கழிப்பறைகள் கட்ட பணம் பெற்று, 30 கழிப்பறைகளை கட்டாமல் மோசடி நடைபெற்றதாக பாண்டிகண்ணன் என்பவர் புகாரளித்தார்.
அதன் பேரில், மறவங்கல ஊராட்சி செயலாளர் முத்துக்கண்ணு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், அமலோற்பவம், சந்திரா, நசீரா பேகம், அன்புதுரை உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதில் ரமேஷ் என்பவர் நாளை பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.