புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் ஊராட்சி வேளாண் வங்கியில் கிருஷ்ணன் என்பவர் அடகு வைத்த 4 சவரன் நகையை மீட்க சென்றபோது நகை இல்லாததால் வங்கி ஊழியர்கள் அவருக்கு புதிய நகைகள் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
அங்கு அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை சரி பார்க்குமாறு கிருஷ்ணன் வெளியிட்ட ஆடியோ பதிவை தொடர்ந்து, ஏராளமானோர் தாங்கள் அடகு வைத்த நகைகளை காட்டுமாறு வேளாண் வங்கி ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
2 நாட்களாக வங்கி ஊழியர்கள் நகைகளை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.