விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் வழக்கறிஞர் ஒருவர் பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஞ்சாசேரி கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம், மதுபோதையில் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் சாலையில் சென்றவர்களை செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த ஆறுமுகம், வாடிக்கையாளர் ஒருவரை செருப்பால் அடித்தப்படி துரத்தும் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.