திருவாரூரில், சகோதரர் உயிரிழந்த நிலையில் அவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை, அத்தைகள் சேர்ந்து விமர்சையாக நடத்திய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவரது 6 சகோதரிகளும் இணைந்து 2,000 பேருக்கு உணவு வழங்கினர்.
மேலும், சுமார் 600 சீர்வரிசை தட்டுகளை திறந்த கண்டெய்னர் லாரியில் வைத்து செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து பிரம்மாண்டமாக விழாவை கொண்டாடினர்.