ஹவுரா - கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக கூறப்படும் வடமாநிலத்தவர்களின் அட்டகாசத்தால் ஆத்திரமடைந்த பயணிகள், செங்கல்பட்டில் ரயிலை நிறுத்தி ரயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவின் ஹவுராவில் இருந்து சென்னை வந்த ரயிலில், ஏராளமான வடமாநிலத்தவர்கள் முன்பதிவு செய்யாமலேயே முன்பதிவு பெட்டிகளில் பயணித்ததாக கூறப்படுகிறது.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்கள் இடையூறு செய்ததாக கூறப்படும் நிலையில், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது.
ரயில் செங்கல்பட்டு வந்தடைந்ததும் ஆத்திரத்தில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதையடுத்து முன்பதிவு செய்த பெட்டிகளில் இருந்த வடமாநிலத்தவர்களை இறக்கிவிட்ட போலீசார், வேறு ரயிலில் அனுப்பி வைத்தனர்.