கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் போர்வெல் அமைத்தும் குடிநீர் தரமில்லாமல் கிடைத்ததால், புதிய போர்வெல் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் அந்த கிராமத்தில், சரிவர குடிநீர் வசதி இல்லாததால் போர்வெல் அமைக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து குடிநீருக்கு பயன்படுத்த முடியாத தரத்தில் தண்ணீர் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய போர்வெல் அமைப்பதுடன், நீர்த்தேக்கத் தொட்டியையும் சரி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.