சேலம் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை திருடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.
மல்லூரில் லதா என்பவரின் இ-சேவை மையத்தில் 13 ஆயிரம் பணத்தையும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு பொருட்கள் கொடுக்கும் ராஜா என்பவரின் கடையில் 11 ஆயிரம் பணத்தையும் அந்த நபர் திருடிச்சென்றார். புகாரின் அடிப்படையில் மல்லூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.