கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் அரசு பேருந்து ஒன்றின் கூறையில் விழுந்த ஓட்டையால், பயணிகள் பேருந்திற்குள்ளேயே குடைபிடித்தபடி பயணித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 800 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு வழிதடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் நாற்பது சதவீதத்திற்கும் மேலான பேருந்துகள் பழைய பேருந்துகள் என்பதால் மேற்கூரை பழுதாகி ஓட்டை உடைசல்களாக காணபடுகின்றன .
இந்த நிலையில் குமரியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் ஓட்டை உடைசல் பேருந்துகளில் பேரூந்திற்கு உள்ளேயேயும் அடைமழை அருவியாய் கொட்டி வருகின்றது.
பேருந்துக்குள் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள் ஆளாகி வருகின்றனர். நிலைமையை உணர்ந்த சில பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி சமாளித்தனர்.
அரசு பேருந்தில் டிக்கெட் மட்டுமல்ல அருவியும் இலவசம் தான் என்று குடை பிடித்து கொண்டு பெண் ஒருவர் பயணிக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.