வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மே 22, 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.