கோயம்புத்தூரில் பண்டைய கால தொல்பொருட்களின் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வ.உ.சி. மைதானத்தில், தொல்லியல் துறை மற்றும் செய்தித்துறை சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் கீழடி, பொருநை ஆற்றங்கரை மற்றும் மயிலாடும்பாறை அகழ்வாய்வில் கிடைத்த தொன்மையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.