அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், வரும் 21-ஆம் தேதி வரை அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலின் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.