செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கல்குவாரியில் சரிந்த ராட்சத பாறை இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்.!

May 15, 2022 09:25:21 PM

திருநெல்வேலி அருகே கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில், 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேரை மீட்கும் பணியில் தீயணைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 2 பேருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் சங்கர நாராயணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.

நேற்றிரவு அங்கு செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம் உள்ளிட்ட 6 தொழிலாளர்கள், 2 லாரிகள் மற்றும் 3 கனரக ஹிட்டாச்சி வாகனங்களில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு, கற்கள் அள்ளும் பணி நடைபெற்ற பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில், பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரும் இடுபாடுகளில் சிக்கிக் கொண்ட நிலையில், பாறை விழுந்த சத்தம் கேட்டு கல்குவாரியின் அருகிலிருந்தவர்கள், தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தடைந்த நிலையில், நள்ளிரவு நேரம் என்பதால் வெளிச்சம் இல்லாததாலும், லேசான மழைப்பொழிவு இருந்ததாலும் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், ராமேஸ்வரம் அடுத்த ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து லெப்டினன்ட் கமாண்டர் சஞ்சய் தலைமையிலான 4 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால், ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின், முருகன் மற்றும் விஜய் ஆகியோரை இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய நிலையில் கையை நீட்டி உதவிக்கு அழைத்த செல்வக்குமார் என்ற தொழிலாளர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததால், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

விபத்து குறித்து பேசிய ஆட்சியர் விஷ்ணு, குவாரியில் கற்கள் தொடர்ந்து சரிந்து விழுந்ததால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டதாகவும், குவாரியில் விதி மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, விபத்து தொடர்பாக, கல்குவாரி உரிமையாளர் சங்கர நாராயணனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Advertisement
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வர மறுத்த மருத்துவர்கள்!.. பொதுமக்கள் வாக்குவாதத்திற்கு பிறகு தாமதமாக சிகிச்சை
கொடைக்கானல் ஏரிச்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டெருமைக் கூட்டம்

Advertisement
Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!


Advertisement